செய்திகள்

பாராளுமன்ற தேர்தலை எப்போது நடத்தலாம்? தீர்மானிக்க சுகாதார , பாதுகாப்பு துறையை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு

பாராளுமன்ற தேர்தல் தினம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் வகையில் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரை சந்திக்கவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமை நாட்டில் என்ன கட்டத்தில் இருக்கின்றது என்பது தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அவர்களிடம் கேட்டறியவுள்ளது.
இதேவேளை அந்த கலந்துரையாடலின் பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்கவுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனபோதும் இருக்கும் நிலைமையில் மே மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு முடியுமா என்பது தொடர்பாக குறித்த கலந்துரையாடல்களின் பின்னரே ஆணைக்குழு தீர்மானம் எடுக்கவுள்ளது. -(3)