செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் மே 23 நடக்குமா? திங்கட்கிழமை விசேட கலந்துரையாடல்

ஒத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 23ஆம் திகதி நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் தற்போதைய கொரோனா நிலைமைகளை கருத்திற்கொண்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனபோதும் இது வரையில் தேர்தலுக்கான தினத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவில்லை. எதிர்வரும் மே 15ஆம் திகதிக்கு பின்னரான தினமொன்றில் தேர்தலை நடத்த முடியும். இதன்படி மே 23ஆம் திகதி தேர்தலை நடத்த நடவடிக்கையெடுப்பது தொடர்பாக அரசாங்கத்திற்குள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
எவ்வாறாயினும் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தம் தினம் தொடர்பாக தீர்மானிப்பதற்காக திங்கட்கிழமை சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
அதன் பின்னர் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. -(3)