செய்திகள்

பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலை தாண்டி இன்று எதுவும் நடக்காது : லக்‌ஷ்மன் கிரியெல்ல

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அதன் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக ஒன்றும் நடக்காது என அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்றைய தினம் அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்காக மூன்று பெயரகளுக்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் இதற்கு மேலாக ஒன்றும் நடக்காது என தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தொடர்பான விவாதத்தை ஆரம்பிக்க எதிர்க்கட்சி முயற்சிகளை மேற்கொள்ளும் என செய்திகள் வெளியாகும் நிலையிலேயே அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.