செய்திகள்

பாராளுமன்ற பலம் இன்றி ரணில் பிரதமரானதை விமர்சிக்கும் மஹிந்த

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் மாற்றத்துக்கான வழி என்று கூறி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப் பட்டமையை விமர்சித்திருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, தன்னிடமே இன்னமும் பெரும்பான்மை பாரராளுமன்ற பலம் இருப்பதாக அவரை சந்திக்க சென்ற பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்து வரும் வேளையில், தானே சுதந்திர கட்சியின் தலைவர் எனவும் அவர் அவர் கூறியுள்ளார்.