செய்திகள்

பாரிசில் நள்ளிரவில் தோன்றிய ஆளில்லாத விமானங்களால் பரபரப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் முக்கிய கட்டிடங்களுக்கு மேலாக இரண்டு இரவுகள் தொடர்ச்சியாக ஆளில்லாத விமானங்கள் தென்பட்டுள்ளமை மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.  செவ்வாய்கிழை மற்றும் புதன்கிழமை இரவு இவ்வாறான ஆளில்லாத விமானங்கள் ஐந்து தடவைக்கு மேல் காணப்பட்டுள்ளன.
மூன்று ஆளில்லாத விமானங்கள் பாதுகாப்பு அருங்காட்சியகத்திற்கு மேலாகவும்,இரண்டு அமெரிக்க தூதரகத்திற்கு மேலாகவும் தென்;பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நள்ளிரவில் பாரிசில் ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள அதேவேளை பகலில் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறவேண்டும்.