செய்திகள்

பாரியளவிலான நிதி மோசடி விசாரணை அறிக்கை வரும் 5ம் திகதி ஜனாதிபதிக்கு

பாரியளவிலான ஊழல் மோசடிகளை தேடியறிவதற்காக அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 5 வருட காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான நிதி மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டிருந்த நிலையில் அவை தொடர்பாக விசாரணைகளை நடத்தியுள்ள குறித்த ஆணைக்குழு அதன் அறிக்கையினை எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.