செய்திகள்

பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு – கிழக்கில் …….!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் பிரேரிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக, மக்களும் தற்போது கடன்செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில், தற்போது அரசாங்கம் பல முக்கிய செயற்பாடுகளை மேற்கொண்டு நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்வதாக மேலும் தெரிவித்தார்.

மேலும், புதிய அரசியல் யாப்பினூடாக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென பிரதமர் ரணில் இதன்போது உறுதியளித்தார்.

N5