செய்திகள்

பாரிய குற்றச் செயல்களை தடுப்பதற்காக புதிய குற்றப் புலனாய்வு மத்திய நிலையம்

குற்றவியல் புலனாய்வுத் தகவல் பகுப்பாய்வு மத்திய நிலையம் என்ற பெயரில் புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனித படுகொலை, பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற பாரிய குற்றச்செயல்கள் சம்பந்தமான தகவல்களை, அன்றாடம் பொலிஸ் நிலையங்கள் மட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்று திரட்டுவது இந்தப் பிரிவினால் நடைபெறும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

அந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து, தெரிவு செய்யப்பட்ட குற்றச் செயல்கள் ஏற்படும் வழி வகைகள் மற்றும் குற்றச் செயல்களின் அதிகரிப்பு சம்பந்தமாக, விசாரணைகள் மேற்கொள்ளும் அதிகாரிகளை தெளிவுபடுத்துவது இந்த புதிய பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 4ம் திகதி குற்றவியல் புலனாய்வுத் தகவல் பகுப்பாய்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட இருப்பதுடன், அது குற்ற அறிக்கைகள் பிரிவில் ஸ்தாபிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

 

n10