செய்திகள்

பாரிய போதைவஸ்து வியாபாரியின் இரு தரகர்கள் யஹரோயினுடன் கைது

சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு கையடக்கத் தொலைபேசியூடாக தரகர்களை பயன்படுத்தி பாரிய முறையில் ஹெரோயின் விற்பனையை மேற்கொண்டு வந்த பாரிய போதைவஸ்து வியாபாரி ஒருவரின் இரண்டு தரகர்களை 5400 மில்லி கிராம் ஹெரோயினுடன் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவரும் தெஹிவளை  பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவருமென பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் பிரதான சந்தேக நபரின் அறிவுறுத்தலின் பேரில் ஹெரோயினை மொத்தமாக கொள்வனவு செய்து தெஹிவளை ஓபன் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து சிறிய பொதிகள் செய்து தெஹிவளை, இரத்மலானை, பொரளங்கமுவ பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய  பிரதான சந்தேக நபரையும் அவர்களுக்கு மொத்தமாக ஹெரோயினை வழங்குபவரையும்  கைது செய்வதற்கான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.பொ. பரிசோதகர் நிசாந்த புஸ்பகுமாரவின் தலைமையில் போதை வஸ்து தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பியங்கர சந்தருவன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
n10