செய்திகள்

பாலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இணைந்துகொண்டுள்ளது.

பாலஸ்தீனம் இன்று உத்தியோகபூர்வமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துகொண்டுள்ளது.
இதன் மூலம் பாலஸ்தீனம் யுத்தகுற்றங்களுக்காக இஸ்ரேலை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய நிலை உருவாகியுள்ளது.இதன் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரித்துள்ள 90வது நாடாக அது மாறியுள்ளது.
ஹேக்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ரியாட் மாலிக் பாலஸ்தீனியர்கள் நீதியையே கோருகின்றனர். பழிவாங்க முயலவில்லை எனகுறிப்பிட்டுள்ளார்.
எமது மக்கள் எதிர்கொள்கின்ற பாரிய அநீதிகள் காரணமாகவும்,அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்கள் காரணமாகவும் நாங்கள் நீதியை கோருகின்றோம், பழிவாங்க முயலவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இஸ்ரேல் இதனை கண்டித்துள்ளது.இஸ்ரேல் ரோம் பிரகடனத்தை அங்கீகரிக்காத போதிலும்,பாலஸ்தீன பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவதலைவர்கள் குற்றங்களை இழைத்தார்கள் என கருதப்பட்டால் அவர்கள் விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டி வரலாம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவது என்ற பாலஸ்தீனத்தின் முடிவிற்கு கடும் எதிர்ப்புண்டானது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனம் ஓரு இறைமையுள்ள நாடு இல்லாததால் அது இணையக்கூடாது என தெரிவித்திருந்தஅமெரிக்கா பாலஸ்தீன அதிகார சபைக்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக எச்சரித்திருந்தது.