செய்திகள்

பாலஸ்தீன அதிகாரசபையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைக்க முயலும் பாலஸ்தீன ஜனாதிபதி

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீன அதிகாரசபையை சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையை பாலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக யுத்த குற்ற விசாரணையை முன்னெடுப்பதற்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எங்களது மண்ணிற்கு எதிராக நாட்டிற்கு எதிராக ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.பாதுகாப்பு சபை எங்களை கைவிட்டுள்ளது.நாங்கள் எங்கு செல்வது என அப்பாஸ் சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவதற்கான ஆவணங்களில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவளை அமெரிக்கா இந்த நடவடிக்கை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
பாலஸ்தீன மக்கள் எதிர்பார்த்துள்ள தீர்வுகளை இந்த நடவடிக்கை கொண்டுவராது,எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பாலஸ்தீனத்தின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பொருளாதார தடைகளை விதிக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.