செய்திகள்

பாலேந்திராவின் நெறியாள்கையில் உருவான நாட்டிய நாடகங்கள் மட்டக்களப்பில் மேடையற்றம் (படங்கள்)

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நாடக கலைஞர் பாலேந்திராவின் நெறியாள்கையில் உருவான இரு நாட்டிய நாடகங்கள் சனிக்கிழமை இரவு மட்டக்களப்பில் மேடையேற்றப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையத்தின் இராஜதுரை அரங்கில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தின் மாணவர்கள் இந்த நாட்டிய நாடகத்தில் பங்குகொண்டனர்.

இலண்டனை தளமாக கொண்டு கடந்த 30வருடமாக நாடகத்துறைக்கு அளப்பரிய சேவையினை பாலேந்திரன் ஆற்றிவருகின்றார்.அத்துடன் இலங்கையிலும் பல ஆண்டுகளாக நாடகத்துறைக்கு அர்ப்பணிப்பாற்றியுள்ளார்.

இதனடிப்படையில் பேராசிரியர் மௌனகுரு விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இலங்கைக்கு வருகைதந்து நாடக பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

இதன்போது பாலேந்திரனால் பயிற்சியளிக்கப்பட்ட காண்டவ தகனம்,நெட்டைமரங்கள் ஆகிய நாடங்கள் காட்சி நாடகங்களாக இங்கு மேடையேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள்,விரிவுரையாளர்கள்,கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.