பாவனைக்குதவாத பச்சை அரிசியும், நெத்திலியும் தீயிட்டு அழிப்பு ( படங்கள்)
அரசாங்கத்தினூடாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு 2000 ரூபா பெறுமதியான போசணை பொருட்கள் வழங்கும் இரண்டாவது திட்டத்தில் 06.05.2015 அன்று பொகவந்தலாவ கொட்டியாகலை, கெகர்ஸ்வோல்ட், கெம்பியன் ஆகிய பகுதிக்கு வழங்கவிருந்த போசணை பொதியில் பாவிக்க முடியாத நிலையில் இருந்த நெத்திலி மற்றும் பச்சை அரிசி ஆகியவற்றை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.
இவ்வாறு கைப்பற்றிய இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான நெத்திலியையும் மற்றும் பச்சை அரிசியையும் இன்று பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்கள் பொகவந்தலாவ பகுதியில் வைத்து தீயிட்டு எரித்துள்ளனர்.
போசணை பொருட்களை வழங்கிய மஸ்கெலியா பகுதியில் உள்ள ஒரு தனியார் தொகை கடைக்கு சென்று பரிசோதனை செய்யும் போது முதலில் பாவிக்க கூடிய நிலையில் உள்ள போசணை பொருட்களை சுகாதார பரிசோதகருக்கு காண்பித்து விட்டு போசணை பொருட்களை பொதியிடும் போது பழுதடைந்த அரிசியையும், நெத்திலியையும் குறித்த வர்த்தகர் பொதியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.