செய்திகள்

பாவனைக்கு உதவாத கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது

வெலம்பட பிரதேசத்திலிருந்து கொழும்பிலுள்ள தொழிற்சாலையொன்றுக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலை அடங்கிய லொறியொன்றை கைப்பற்றியதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் 6 ஆயிரத்து 720 கிலோகிராம் நிறையுடைய கழிவுத் தேயிலை இருந்ததாகவும் லொறியின் சாரதியை இலுக்வத்தை, உருலேவத்தை பகுதியில் லைத்து கைது செய்ததாகவும் தேயிலைக்குச் சொந்தக்காரர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.