செய்திகள்

பாஸிச வாத அரசாங்கமே தற்போது நாட்டில் இருக்கின்றது : ஶ்ரீ.ல.சு.க செயலாளர் தெரிவிப்பு

பாஸிச கொள்கையினை ஒத்த்தாகவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுவதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில்ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரிய தர்ஷன யாப்பாவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்து தற்போதைய அரசாங்கம் எதிரணயினரை கைது செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இது அவர்களை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் செயற்பாடாகவே கருதுகின்றோம். இதற்கென நிதி மோசடி விசாரணை பிரிவொன்றை அமைத்து பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
இந்த செயற்பாடானது  இத்தாலியின் முசோலினி இ ஜெர்மனியின் ஹிட்லர் இ சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலின் ஆகியோர் பின்பற்றிய பாஸிச வாத கொள்கையினை ஒத்ததாகவே காணப்படுகின்றது. இவர்கள் தங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை வேட்டையாடும் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இதேபோன்றே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன. என அவர் தெரிவித்துள்ளார்.