செய்திகள்

பா.ஜ.க. இலச்சனை வெளியானது!

தமிழகத்தில் இடம்பெறவிருக்கும், சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சிகளும் பெரும் முனைப்போடு தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தலுக்கான கட்சி இலச்சனை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார இலச்சினையினை கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார். இதில் கட்சியின் சின்னமான தாமரை மற்றும் பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்றிறுள்ளதுடன், ‘தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும்’ என்ற வாசகமும் இடம் பெற்றிறுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், தேசிய செயலாளர் எச்.ராஜா, மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன், ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் கங்கை அமரன், கரு.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் இலச்சினை வெளியீட்டைத் தொடர்ந்து தமிழினி சௌந்தரராஜன் ஊடகவியளாளர்களை சந்தித்து அவர்தம் கேள்விகளுக்கு பதிலுரைத்தார். அதில், ‘இந்த தேர்தலில் கழகங்களை தூக்கி வீசும் அளவுக்கு நாங்கள் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் கழகங்கள் நல்லாட்சியை வழங்கவில்லை. மத்தியில் பா.ஜ.க. நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால், அந்த ஆட்சியின் நீட்சி தமிழகத்திலும் வரவேண்டும் என முயற்சி செய்கிறோம்.

நாங்கள் ஏன் இந்த கருத்து சித்திரத்தை தீவிரமாக வெளியிட்டு இருக்கிறோம் என்றால், சில கருத்து கணிப்புகள் பொய்யாக திணிக்கப்பட்டு, பொய்யாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உலாவ விடப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக பா.ஜ.க.வை தாக்க வேண்டும் என்ற நோக்கம் அதில் இருக்கிறது என்பது மறைமுகமாக தெரிகிறது. பா.ஜ.க. வளர்ச்சி அடைந்து வருகிறது. பா.ஜ.க. துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை இன்றைய அரசியலில் உருவாகி இருக்கிறது. எனவே, ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் கழகங்களுக்கு மாற்றாக இருக்கும் ஒரே கூட்டணி பா.ஜ.க. கூட்டணி தான்.

பா.ஜ.க.வின் 2-வது வேட்பாளர் பட்டியலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள், அவர்கள் போட்டியிடும் இடங்கள், நாங்கள் போட்டியிடும் இடங்கள், எண்ணிக்கை அத்தனையும் இன்று (நேற்று – திங்கட்கிழமை) முடிவு செய்யப்பட்டு, மத்திய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஒப்புதலோடு வெளியிடப்படும். என்று தெரிவித்துள்ளார்.

N5