செய்திகள்

பிடிக்கவே முடியாதவன் என்று கூறப்பட்ட ஒற்றைக்கண் ஐ.எஸ். தீவிரவாதி மொக்தார் பெல்மொக்தாரை கொன்றது அமெரிக்கா

பிடிக்கவே முடியாதவன் என்று கூறப்பட்ட ஒற்றைக்கண் ஐ.எஸ். தீவிரவாதி மொக்தார் பெல்மொக்தாரை அமெரிக்கா கொன்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஒற்றைக்கண்ணன், திரு. மார்ல்போரோ என பல பெயர்களில் அழைக்கப்படும் தீவிரவாதி மொக்தார், அல்ஜீரிய பாலைவன நகரமான ஹாரதாயவில் 1976- பிறந்தான். இவனது நடத்தை பிடிக்காமல் இளம் வயதிலேயே வீட்டில் இருந்து துரத்தப்பட்டான். அதன் பிறகு அல்-கொய்தாவில் ஆரம்பித்து பல தீவிரவாத இயக்கங்களில் முக்கிய பங்காற்றினான். பிறகு அல்ஜீரியாவில் பல தீவிரவாத செயல்களில் ஈடுப்பட்டு வந்தான். கடந்த மாதம் இவன் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு முறை மாலியில் நடந்த சண்டையில் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவன் தொடர்ந்து தப்பி வந்தான். கடைசியாக அமெரிக்க அரசு இவன் தலைக்கு 5 மில்லியன் டாலர் அறிவித்தது. இந்நிலையில் லிபியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் மொக்தார் பெல்மொக்தார் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அவன் கொல்லப்பட்டதற்கான உறுதியான ஆதாரத்திற்காக காத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.