செய்திகள்

பிணையில் வெளியே வந்தார் திஸ்ஸ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்தரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்றுள்ளதாக அவர் வெளியிட்ட ஆவணம் போலியானது எனத் தொடரப்பட்ட வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.