செய்திகள்

பின்லாடன் மறைவிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்கா.

அல்ஹைடா தலைவர் பின்லாடன் 2011 ம் ஆண்டு கொல்லப்பட்ட வேளை பாக்கிஸ்தானில் அவரது இரகசிய மறைவிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணஙகளை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஓசாமாவை படுகொலைசெய்த விசேட படைப்பிரிவினர் குறி;ப்பிட்ட இரகசிய ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.
அராபிய மொழியில் எழுதப்பட்ட கடிதங்களுடன் பொப் வூட்வேர்ட் , நோம் சொம்ஸ்கி ஆகியோரால் எழுதப்பட்ட ஆங்கில நூல்களும் ஓசாமாவின் மறைவிடத்தில் மீட்கப்பட்டன.
பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்களில் அல்ஹைடா நடவடிக்கைகள் தொடர்பாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள்,பல கடிதங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன, அவை அனேகமாக அராபிய மொழியில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.அதில் குறிப்பாக பிரான்ஸ் குறித்த பல தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் காணப்படுகின்றன,அந்த நாட்டின் பொலிஸ், இராணுவம், அரசியல்குறித்த ஆவணங்களே காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆவணங்களை தீவிர ஆய்விற்குட்படுத்திய பின்னரே அவற்றை பகிரங்கப்படுத்தியதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.