செய்திகள்

பின்லேடன் திருச்சி வந்தால் என்ன நடக்கும்?

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை ஒரு காமெடியன் போல சித்தரித்து பாலிவுட்டில் ”தேரே பின்லேடன்” என்ற பெயரில் இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

அதுபோல இப்போது தமிழிலும் ஒரு படம் வருகிறது. பின்லேடன் திருச்சி வந்தால் என்ன நடக்கும்? என்பதே இந்த படத்தின் கரு.

மிர்ச்சி சிவா நடிப்பில் புதுமுக இயக்குநர் அரவிந்த் இயக்கும் இந்த படத்திற்கு ‘பின்லேடன்‘ என்றே பெயர் வைத்துள்ளனர். திருச்சியில் பின்லேடன் படும் இன்னல்களை காமெடியாக இந்த படம் காட்டுமாம்.

மேலும் இந்த படத்தில் ஸ்பெஷல் என்னவென்றால் பாடல் காட்சிகளில் நடிகர் சிவா கொஞ்சம் நடனம் ஆடியுள்ளதுதான் என்கிறார் இயக்குனர்.

N5