செய்திகள்

பின் கதவால் அமைச்சரவைக்குள் வந்த ஹக்கீம் கூறுவதை ஏற்க முடியாது : ராஜித கூறுகின்றார்

ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்கு பின் கதவால் வந்தவரே அவருடன் நாம் எந்த கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை அவர்களின் அரசியல் வேறு எங்களின் அரசியல் வேறு  நல்லாட்சி தொடர்பான தெளிவின்றியே அவர்கள் செயற்படுகின்றனர் என  அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹக்கீம் பின் கதவால் அமைச்சரவைக்கு வந்தவர். நாம் மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறிவந்த போது முஸ்லிம் மக்களும் எம் பின்னால் வந்துவிட்டனர். அதன் பின்னரே ஹக்கீம் போன்றோர் இங்கு வந்தனர். அவர்களுடன் எமக்கு எந்த கொடுக்கல் வாங்கலும் இருக்கவில்லை. அவர்களின் அரசியல் வேறு எங்களின் அரசியல் வேறு.  நல்லாட்சி தொடர்பாக தெளிவு இருந்திருந்திருந்தால் இப்படி நடக்காது என்றார்.