செய்திகள்

பிபிசி தமிழ்ச் சேவையை டெல்லிக்கு மாற்றக் கூடாது: கி.வீரமணி

லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிபிசி தமிழ்ச் சேவையை டெல் லிக்கு மாற்றும் முடிவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி தமிழ்ச் சேவை, பிபிசி இந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டெல்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகச் செலவுகளைக் குறைக் கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது.

பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது. தற்போது டெல் லிக்கு மாற்றப்படுவதால், இந்திய – இலங்கை நட்புறவு காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே ஒலிபரப்பாகும். இலங்கைத் தமிழர்களின் செய்தி களைக் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படும். மேலும் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசை யிலும் மேலோங்கும்.

பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலை மையை விட்டு தூரச் செல்லும் போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத் தப்படும் அபாயமும் ஏற்படலாம்.

எனவே, லண்டனை தலை மையிடமாகக் கொண்டு செயல் படும் பிபிசி நிறுவனம் அதே முறையில் செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து தமிழக கட்சிகளும் உலகத் தமிழர்களும் அமைப்புகளும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர்களும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.