செய்திகள்

பிபிலையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலமொன்று மீட்பு

பிபிலை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

 இன்று அதிகாலை இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.