செய்திகள்

பிரச்சினையை கிளிறிவிட்டால் சவாலை எதிர்கொள்ளத் தயார்: சந்திரிக்கா எச்சரிக்கை

நாட்டிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்; கட்சிக்குள்ளும் பிரச்சினைகளை உருவாக்காமல் தவிர்த்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, குழப்பங்களை மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் கிளிறிவிட்டுக் கொண்டிருந்தால் அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நான் இதனை தனியாளாகக் கதைக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினராகவே இதனைக் கூறுகிறேன். அவர் கட்சியை அழிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி இது மூன்றாவது தடவையாகும். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமையை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பறித்த போது அவர் கட்சியை உடைக்க முயற்சித்தார்.

கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து சிறிமாவை வெளியேற்றும் தனது கோரிக்கைக்கு நாடளாவிய ரீதியில் சென்று ஆதரவு திரட்ட முயற்சித்தார். 2001 இல் இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மூன்றாவது தடவையாகும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியில் திருமதி குமாரதுங்க கூறியுள்ளார்.

அதேவேளை மகிந்த ராஜபக்ச தோற்றுவிக்க முயற்சிக்கும் குழப்பங்;கள் குறித்து சு.க.ஆதரவாளர்கள் நன்கு அறிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.