செய்திகள்

பிரதமராக ரணில் பதவியேற்றார்

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாக மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே வாக்குறுதியளித்திருந்தார்.