செய்திகள்

பிரதமரின் சீனப் பயண ஏற்பாடுகளைக் கவனிக்க அதிகாரி ஒருவர் பிஜிங் பயணமானார்

சீனாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவிருக்கும் அதிகாரபூர்வ பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க,  வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் பிஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் திகதி  சீனாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது பல்வேறு முக்கிய உடன்பாடுகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் இந்தப் பயணத்தை, இரண்டு நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கும் நிலையில், பயண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக   வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

n10