செய்திகள்

பிரதமரின் வாகன தொடரணியை வீடியோ எடுத்தவர் கைது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணித்த வாகன தொடரணியை வீடியோ எடுத்த ஒருவர் பிரதமர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டிமெல் மாவத்தை பகுதியில் பிரதமர் பயணித்த வாகனம் சென்றுக்கொண்டிருந்த போது குறித்த நபர் இரகசியமான முறையில் அதனை வீடியோ எடுத்துள்ள நிலையில் அதன்போது அந்த வாகனத்திற்கு பின்னால் சென்ற பாதுகாப்பு பிரிவினர் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைக்காக அவர் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
n10