செய்திகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சி

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு எதிர்க் கட்சியினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் தெரிவு செய்யப்பட்ட விதம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டே நம்பிக்கையில்லா பிரேரணைக்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிய வருகின்றது.
இதன்படி தினேஸ் குணவர்தன தலைமையிலான குழுவொன்று இந்த பிரேரனைகளை தயாரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.