செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தயார் : டலஸ் அழகப்பெரும

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ்அழகப்பெறும தெரிவித்துள்ளார்.
இதன்படி 60ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அந்த பிரேரணையில் இது வரை கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை விரைவில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளமன்றத்;தில் பெரும்பான்மையின்றி பிரதமராக இருத்தல் ,மத்திய வங்கி ஆளுனர் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாகவே பிரதமருக்கு எதராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.