செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கின்னஸ் சாதனையாம் ; கம்மன்பில கூறுகின்றார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கின்னஸ் சாதனையாக கருதப்படக்கூடிய விடயமென பிவித்துறு ஹெல உறுமய தலைவலான மேல் மாகாகண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கின்னஸ் சாதனையாக கருதப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது. அந்தளவுக்கு அதிகப்படியான உறுப்பினர்கள் அந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். இதில் அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகவுள்ளது.
பிரதமர் தற்போது அந்த பிரேரணையில் எத்தனை  கையொப்பங்கள் உள்ளன என எண்ணிக்கொண்டிருக்கின்றார். அப்படி பார்க்க தேவையில்லை. சாதாரணமாக 20 கையொப்பங்கள் இருந்தாலே போதும் பிரேரணையை கொண்டுவரலாம். என்பதனை புறிந்துக்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.