செய்திகள்

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்!

சீனாவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

நேற்று இரவு (10) அவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது சீன விஜயத்தின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளார்.

மேலும், சீனாவின் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இலங்கையில் முதலீடு செய்வது குறித்து அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

N5