செய்திகள்

பிரதமர் ஜெயரட்ண திருப்பதியில் தரிசனம்

இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரட்ணவுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரட்ண நேற்று காலை திருப்பதி ஏழுமலையானை தரி சிக்க தனது மனைவி அனுல்யா யாப்பா மற்றும் குடும்பத்தினருடன் திரு மலைக்கு வந்தார்.

அவரை தேவஸ்தான அதி காரிகள் வரவேற்று சுவாமி தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.

பின்னர் அவருக்கு தேவஸ் தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவு படம், பட்டு வஸ்திரம் போன்றவை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு, திருப்பதி எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்