செய்திகள்

பிரதமர் தலைமையில் ஊழலுக்கெதிரான குழு

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்களை விசாரணை செய்வதற்கு ஊழலுக்கெதிரான குழுவை பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் அமைப்பதற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

இந்த குழுவில், அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திஸ்ஸநாயக்க, ஆர். சம்பந்தன், எம். ஏ . சுமந்திரன் , ஜனநாயக முன்னணி தலைவர் சரத் பொன்சேகா , கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜே.சி . வெலியமுன , மாலிக் சமரவிக்கிரம ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இதேவளை, உடனடி நடவடிக்கை குழுவை அமைப்பதற்க்கான அங்கீகாரத்தையும் அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸ்ஸநாயக்க ஒருங்கிணைப்பாளராக செயற்படுவார்.