செய்திகள்

பிரதமர் பதவியில் ரணில் வெகுகாலம் நீடிக்கமாட்டார்: சம்பிக்க சொல்கிறார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பதவியிலிருந்து விலகும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். த்துடன் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ம் திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய தோற்கடிக்கும் என்றும் அவர் கூறினார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். றித்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிடுகையில் :-

“ற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பதவியிலிருந்து விலகும்காலம் வெகு தொலைவில் இல்லை. அத்துடன் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ம் திருத்தச் சட்டத்தை ஜாதிக ஹெல உறுமய தோற்கடிக்கும். கடந்த 13ம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைமையினைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலகி, கரு ஜயசூரிய அல்லது நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டின் ஆட்சி மாற்றம் குறித்து மக்கள் கண்காணித்து வருகின்றனர். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றிற்கும் இடையில் அதிகார சமநிலையையே ஜாதிக ஹெல உறுமய எதிர்பார்க்கின்றது.  எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு சூழ்ச்சித் திடடத்தின் ஊடாக ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. ரசியலமைப்பு திருத்தங்கள் நல்லாட்சிக்கு விரோதமானது’ எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.