செய்திகள்

பிரதமர் மோடி மூன்று நாடுகள் சுற்றுப் பயணம்

எதிர்வரும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் இந்த  சுற்றுப்பயணம். இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடு. தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றம். சர்வதேச நல்லுறவு ஆகியவை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டுக்குச் செல்லும் மோடி. அந்நாட்டு அதிபர் பிரான்சுவா ஹொலாந்தை சந்தித்துப் பேச உள்ளார். அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மோடி. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே பொருளாதார கூட்டு றவை பலப்படுத்த விவாதங்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.  மேலும் பாரிஸ் நகரத்துக்கு வெளியே இருக்கும் சில தொழிற்சாலைகளைப் பார்வையிடவுள்ளார்.  இந்த சந்திப்பின் மூலம்  ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு அவர்களை ஈர்க்க முயற்சிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் ஏப்ரல் 12-ஆம் தேதி ஜெர்மனிக்குச் செல்லும் அவர் . ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலைச் சந்தித்துப் பேசுவதோடு. அந்நாட்டில் நடைபெறும் பிரபல வர்த்தகக் கண்காட்சியான “ஹானோவர் மெஸ்ஸி’யில் கலந்து கொள்கிறார். ஹேன்னோவர் மெஸ் எனும் தொழிற்காட்சியில் இந்தியாவும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு களை விரிவுபடுத்த ஜெர்மனியிடம் ஆதரவை நாட உள்ளதாகவும் அங்கிருந்து இந்தியாவுக்கு அதிகளவு முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கனடாவில் அங்குள்ள அரசியல் தலைவர்கள், தொழில திபர்கள் மற்றும் இந்திய வம்சா வளியினரைச் சந்திக்கிறேன். கனடாவுடன் அணுசக்தி தொடர் பான உறவை மீண்டும் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ள இருக்கி றேன். நம்முடைய நாட்டில் எந்தத் துறைகளுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படு கிறதோ, அதில் எல்லாவற்றிலும் கனடாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.