செய்திகள்

பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் : வீரவன்ச

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு வலியுறுத்தி நேற்று குருநாகலில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
100 நாள் முடிந்துவிட்டது இந்த காலத்தில் எத்தனை திருட்டுகள் இடம்பெற்றதோ தெரியவில்லை.  இனி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும். நாம் அடுத்த வாரம் பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளோம்.  அதனை தொடர்ந்து எப்படியும் பாராளுமன்றம் கலைக்கப்படும். என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.