செய்திகள்

பிரதமர் ரணிலுடன் பிஸ்வால் சந்திப்பு: இரு தரப்பு உறவுகள் குறித்து ஆராய்வு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுக்களின் போது இரு தரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பரம் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1 (4)