செய்திகள்

பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால் வெற்றி பெறுவேன்: மஹிந்த

எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவேனா என்பது தொடர்பாக சரியாக கூற முடியாது எனவும் அப்படி போட்டியிட்டால் அதில் வெற்றிப் பெறுவது உறுதியே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்தக்காலத்தில் மனித உரிமைகளை மீறியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘அல்ஜசீரா” தொலைக்காட்சிக்கு மஹிந்த வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:
“தேர்தல் முடிந்த பின்னர் சூழ்ச்சிகளை மேற்கொண்டு தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க முயற்சித்தாக தெரிவிக்கப்படுவது நகைச்சுவையானதாக இருக்கினறது. 2மணி நேரத்தில் அவ்வாறு செய்ய முடியுமா? அத்துடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென எனக்கு தேவையில்லை.
இதேவேளை யுத்தக்காலத்தில் முறையற்ற வகையில் அதிகாரத்தை பயன்படுத்தி மனித உரிமைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. அது எனக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுத்த நடவடிக்கையே. இந்நிலையில் அடுத்த தேர்தலில் பிரதமாராகுவேன் என்பதனை கூறமுடியாது. ஆனால் நான் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன்”  என தெரிவித்துள்;ளார்.