செய்திகள்

பிரதி அமைச்சராக விஜயகலா பதவியேற்பு: வெலிக்கடை சிறைக்கும் சென்றார்

மகளிர் விவ­கார பிர­தி­ய­மைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று அமைச்சில் கட­மை­களைப் பொறுப்­பேற்­றுக்கொண்டார்.

அமைச்சில் இடம்பெற்ற விஷேட பூஜைகளின் பின்னர் புதிய பதவியை அவர் பொறுப்பேற்றார்.

விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று தனது கட­மையை பொறுப்­பேற்ற பின்பு வெலிக்­கடை சிறைச்­சா­லையின் பெண்கள் பிரி­வுக்கு விஜயம் செய்து பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் நேரில் சென்று பார்­வை­யிட்டு நலன் விசா­ரித்தார்.

001

கிளிநொச்சியில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி உட்பட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான தமிழ்ப் பெண்கள் பலருடன் அவர் உரையாடியார். அவர்களுடைய விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.