செய்திகள்

பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தை ராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ கரலியத்தை தன்னுடைய பிரதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 22 ஆம் திகதி ஐ.ம.சு.மு.வைச் சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைசசர்களாகவும் பதவியேற்றார்கள். இதன்போது புத்த சாசன பிரதி அமைச்சராக திஸ்ஸ கரலியத்தை பதவியேற்றுக்கொண்டார். தன்னுடைய பதவியைத் தொடர முடியாத நிலை இருப்பதாலேயே இராஜினாமா செய்வதாக இன்று அவர் தெரிவித்தார்.