செய்திகள்

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும் மைத்திரிக்கு ஆதரவு: அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில் இன்று புதன்கிழமை காலை நடந்த ஐதேகவின் பெண்கள் அமைப்புக் கூட்டத்தில், அவர் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார். மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில், பைசர் முஸ்தபா, பொருளாதார ஊக்குவிப்பு பிரதி அமைச்சராகப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.