செய்திகள்

பிரபஞ்சப் பிரக்ஜை (Cosmic Consciousness)

மருத்துவர் சி. யமுனாநந்தா

எம்மைச் சூழவுள்ள பௌதீகவெளி எவ்வாறு அமைந்து உள்ளது என்பதனை எமது மனம் உற்று நோக்குகின்றது. இதனைச் சித்தம் என்பர். சித்தவெளியின் ஆதியினையும் சித்தவெளியின் அந்தத்தினையும் மெய்யிலாளர்கள் சித்தாந்தமாக உணர்வர். விஞ்ஞானிகள் இயற்பியலாக உணர்வர். இயற்பியல் விஞ்ஞானிகள் பௌதீக வெளியை காலம், வெளி சார்பாகவும், மின்காந்த அலைகள், ஈர்ப்பு அலைகள் சார்பாகவும் உற்று நோக்குகின்றனர்.

பிரபஞ்சத்தின் அடிப்படை ஏக அலகுகளாக சக்தித் திணிசுகளின் அலை வடிவங்கள் (ருnகைநைன கநைடன அழனநட) கருதப்படுகின்றன. இவையே பிரபஞ்சப் பிரக்ஜையாக அமையும்.

பிரபஞ்சத்தின் வியாபகம் நரம்பு வலைப்பின்னல் கட்டமைப்புப் போன்று அமைவதாகக் கருதுகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் வெவ்வேறு பௌதீகக் கணியப்படிகங்கள் உண்டு. இவற்றுக்கு இடையிலான தொடர்புகள் பௌதீகக் கணியப் படிகம் 1 படிநிலை 1, பௌதீகக் கணியப் படிகம் 2 படி நிலை 2, பௌதீகக் கணியப் படிகம் 3 படி நிலை 3…. என்றவாறு நரம்புவலைப் பின்னல் அமைப்பாக அமையும். மனித மூளையில் நரம்புக் கலங்கள் எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே பிரபஞ்சத்தின் பௌதீகக் கணியப் படிகங்களுக்கு இடையிலான தொடர்பாடல்களும் அமையும். இதுவே இயற்கையின் நியதி ஆகும். மனிதனின் உன்னத கண்டு பிடிப்பான கணனியின் செயற்பாடும் இத்தகையதே ஆகும். (யுசவகைiஉயைட நேரசயட நேவறழசம).

பிரபஞ்சப் பௌதீகச் சக்தித் திணிசுகள் குவாண்டம் பௌதீகத்தின் அடிப்படை ஆவர்த்தனங்களாக அமைந்து தொடர் வலையமைப்புக்களாக அமைகின்றன. (ஊழளஅழடழபiஉயட நேரசயட நேவறழசம) பிரபஞ்சப் பிரக்ஜையானது சக்தித் திணிசுகளின் பல்வேறான அலைநிலைகளின் சாகரமாக உருவகப்படுத்தலாம். இவற்றின் பௌதீகப் படிநிலை படிநிலைத் தொடர்புகள் இயற்பியலின் அற்புதமாக அமையும். மானிடகுலம் அதன் நாகரிகத்தின் பரிணாமத்தின் உச்சியில் அதன் இருப்பின் கடுகளவை அறியும் தகையதாக எப்பொழுதும் அமையும். அதுவே அதன் தன் பிரபஞ்சப் பிரக்ஜையாகும்.