செய்திகள்

பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் ஆர் கே லக்ஷமண் காலமானார்

இந்தியாவின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவரான ஆர் கே லக்ஷமண் இன்று புனே நகரில் காலமானர். அவருக்கு வயது 93.

சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் சில நாட்கள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று-திங்கட்கிழமை அவர் உயிரிழந்தார்.

அவர் உருவாக்கிய ‘பொதுஜனம்’ எனும் கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமடைந்தது. நாட்டு நடப்புகளையும், அரசியல்வாதிகளையும் மையப்படுத்தி அந்தப் பாத்திரத்தின் மூலம் நையாண்டித்தனமாக தனது கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி வந்தார்