செய்திகள்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு.பு. கோபால கிருஷ்ணன் மரணம்

 

பிரபல திரைகலைஞர் யூகிசேது அவர்களின் தந்தை திரு.G. கோபால கிருஷ்ணன் அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

GGK என்று அழைப்படும் இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர். AVM நிறுவனத்தின் திரு முருகன் அவர்களுடைய கல்லூரி தோழரான இவர். AVMல் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கினார். பிறகு திரு எம்.ஜி.ஆர் அவர்களின் ஹிந்தி திரையுலக தயாரிப்புகளுக்கு மேனேஜராக இருந்து, தேவர் ஃபிலிம்ஸ் சின்னப்ப தேவரின் ஹிந்தி படங்கள் அனைத்திற்கும் நிர்வாகியாக இருந்தார். பல நூறு தமிழ் படங்களுக்கு பைனான்சியராகவும் இருந்தவர்.