செய்திகள்

பிரபாகரன் சிலை அகற்றம்: மதிமுகவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம்

பிரபாகரன் சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டிணம் தாசில்தார் அலுவலகம் முன் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

காலை பத்து மணி அளவில், நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் எதிரே, மதிமுகவினர் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபாகரன் சிலை அகற்றத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.