செய்திகள்

பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி எங்கே : குழப்பத்தில் பாதுகாப்பு தரப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தி கைத்துப்பாக்கிக்கு என்ன நடந்தது என்பது புரியாத புதிராக இருப்பதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சிங்கள வார பத்திரிகையொன்றில் வெளியாகியுள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி நந்திக்கடலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தபோதிலும் அவரது பிரத்தியேக ஆயுதங்களுக்கு என்னவாயிற்று என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. GLOCK 17 ரக மில்லிமீற்றர் 9 ரக கைத் துப்பாக்கியையே பிரபாகரன் விரும்பி பயன்படுத்தி வந்துள்ளதுடன் அதனை அவர் எவ்வேளையிலும் இடுப்பிலேயே வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தடன் M16A2 ரக ரைபில் ஒன்றையும் பிரபாகரன் பிரத்தியேக ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார். இவை மிகவும் விலை உயர்ந்தது.

இதற்கு மேலதிகமாக உறுப்பினர்களை அடயாளம் காண்பதற்காக கழுத்தில் கட்டப்படும் இலக்கத் தகட்டையும் காணவில்லை.பிரபாகரனின் உறுப்புரிமை இலக்கம் 001 ஆகும்.

இந்நிலையில் பிரபாகரன் பயன்படுத்திய இரண்டு ஆயுதங்கள் மற்றும் இலக்கத் தகடு என்பனவற்றுக்கு என்னவாயிற்று என்பது புரியாத புதிராகியுள்ளது என பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.