செய்திகள்

பிரபாகரன் போன்று சம்பந்தனைப் பார்க்க வேண்டாம் : அமைச்சர் ராஜித சேனாரட்ண

சம்பந்தனை பிரபாகரன் போல் பார்க்கக் கூடாது என அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது வடக்கில் இராணுவ முகாமொன்றுக்குள் சம்பந்தன் சட்டவிரோதமான முறையில் சென்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வடக்கை சேர்ந்தவர் அவருக்கு அங்கு செல்ல முடியும் அவரை பிரபாகரன் போன்று பார்க்க வேண்டாம். தமிழர் என்ற காரணத்தினாலேயே அவர் இராணுவ முகாமுக்குள் சென்றது குற்றம் போல் தெரிகிறது. அவரை அவ்வாறு பார்க்க வேண்டாம்.

அவர் முன்னறிவித்தல் இன்றி அங்கு சென்றதாக கூறப்படுகின்றது. அப்படி சென்றதில் தவறு கிடையாது. ஆனால் முன்னறிவித்தலுடன் சென்றிருந்தால் அவருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அங்கு கிடைத்திருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.