செய்திகள்

பிரஸல்ஸ் விமான நிலையத்தில் பாரிய இரட்டைக் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி! விமான நிலையம் மூடப்பட்டது

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் விமான நிலையத்தில் இன்று பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த குறைந்த பட்சம் 13 பேர் போர் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, சர்வதேச விமான நிலையத்தின் சார்பில், யாருக்கும் பிரஸல்ஸ் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் மிக பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், இதில், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பதற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

03

02
R-06