செய்திகள்

பிரான்சில் இராணுவத்தினர் மீது கத்திக்குத்து

பிரான்சின் தென்பகுதியில் யூதர்களுக்கு சொந்தமான கட்டிடமொன்றிற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மூவர் இனந்தெரியாத நபரின் கத்திக்குத்திற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
நைஸ் நகரத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவருடன் இணைந்து செயற்பட்டஇருவர் தப்பியோடியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரும் சில வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் தாக்குதல்களை மேற்கொண்ட நபரும் ஒரே பெயரை உடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.கத்தியை பயன்படுத்தியே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிரான்சை உலுக்கிய தாக்குதல்கள் படுகொலைகளுக்கு பின்னர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.