செய்திகள்

பிரான்ஸ் தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்: 12 பேர் பலி ( 2ஆம் இணைப்பு)

பிரான்சின் தலைநகர் பாரிஸில் சார்லி ஹெப்டோ என்ற கேலிச்சித்திர சஞ்சிகை அலுவலகம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் இன்று காலை நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த சஞ்சிகையின் ஆசிரியர் மற்றும் பிரபலமான மூன்று கேலிச்சித்திர வரைஞர்கள் மற்றும் ஒரு போலிஸ் உத்தியோகத்தர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கார் ஒன்றில் வந்த முகமூடி அணிந்த மூன்று ஆயுததாரிகள் அந்த சஞ்சிகையின் அலுவலகத்தினுள் ஏ .கே .47 துப்பாக்கிகளுடன் புகுந்து அங்கு தனது மகளுடன் நின்றிருந்த ஒரு கேலிச்சித்திர வரைஞரை பலவந்தப்படுத்தி கதவை திறந்து உள்நுழைந்து முதலில் நேரே ஆசிரியரின் அறைக்குள் நுழைந்து அவரையும் அவருக்கு பாதுகாப்பாக நின்ற போலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் சுட்டுக்கொண்டனர். அத்துடன் அந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் மற்றும் இரு பிரபல கேலிச்சித்திர வரைஞர்களையும் சுட்டுவிட்டு அல்லாவுக்காக இவர்களை பழிவாங்கி இருப்பதாக சத்தமிட்டனர்.

இவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறிய போது நடை பாதையில் காயப்பட்டு விழுந்து கிடந்த ஒரு பொலிசார் ஆயுததாரிகளைக் கண்டு தனது கைகளை உயர்த்தி உயிருக்கு மன்றாடியபோது அதனை பொருட்படுத்தாத அவர்கள் அந்த பொலிசாரின் தலையில் சுட்டுவிட்டு தப்பிச் செல்லும் காட்சி வீடியோவில் பதிவாகி வெளியாகியிருக்கிறது.

காரில் தப்பிச் சென்ற இந்த ஆயுததாரிகளை தேடும் பாரிய நடவடிக்கை ஒன்றில் பொலிசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான சஞ்சிகை அல்லாவை கேலிசெய்யும் வகையில் தொடர்ச்சியாக கேலிச் சித்திரங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயுததாரிகள் பொலிசாருடன் மோதலில் ஈடுபடும் காட்சி

துப்பாக்கி சத்தங்களும் ஒரு பெண் காரின் பின்னால் ஓடுவதும்

3 1 2 4